ஜே.என்.யூ. மாணவர் சங்க தலைவி ஆய்ஷ் கோஷ் மீது வழக்குப்பதிவு

ஜே.என்.யூ. மாணவர் சங்க தலைவி ஆய்ஷ் கோஷ் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜே.என்.யூ. மாணவர் சங்க தலைவி ஆய்ஷ் கோஷ் மீது வழக்குப்பதிவு
Published on

புதுடெல்லி,

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவி ஆய்ஷ் கோஷ் உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 4 ஆம் தேதி பல்கலைக்கழகத்தின் கணினி சர்வர் அறையை சேதப்படுத்தியதாக ஆய்ஷ் கோஷ் உள்ளிடோர் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்து கொண்டு இருந்தது. அப்போது, அங்கு முகமூடி அணிந்து வந்த மாம ஆசாமிகள் இரும்பு கம்பி, கம்பு போன்றவற்றால் மாணவர்களை சரமாரியாக தாக்கினர். ஆய்ஷ் கோஷ் உள்பட 34 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com