ராஜ் தாக்கரே மீது இருபிரிவினர் இடையே மோதலை தூண்டியதாக வழக்குப்பதிவு

மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை அகற்ற வேண்டும் என அரசை எச்சரித்த ராஜ் தாக்கரே மீது இருபிரிவினர் இடையே மோதலை தூண்டும் வகையில் பேசியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
ராஜ் தாக்கரே மீது இருபிரிவினர் இடையே மோதலை தூண்டியதாக வழக்குப்பதிவு
Published on

மும்பை,

அவுரங்காபாத்தில் கடந்த 2-ந் தேதி நவநிர்மாண் சேனாவின் பொது கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, " 4-ந் தேதிக்குள் மசூதிகளில் ஒலிப்பெருக்கிகள் அகற்றப்படவில்லை என்றால், இந்துக்கள் மசூதிகளின் முன் நின்று இரு மடங்கு அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகளில் அனுமன் பாடல்களை ஒலிக்க செய்வார்கள். மசூதிகளில் இருந்து ஒலிப்பெருக்கிகளை நீக்கவில்லை எனில் அதன்பிறகு நடக்கும் சம்பவங்களுக்கு நான் பொறுப்பல்ல " என பேசியிருந்தார்.

இந்த நிலையில், அவுரங்காபாத் போலீசார் ராஜ் தாக்கரே மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இரு பிரிவினர் இடையே மோதலை தூண்டுவது உள்ளிட 4 பிரிவுகளின் கீழ் (116, 117, 153 (ஏ), எம்.பி.ஒ. 135) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜ் தாக்கரே தவிர அவுரங்காபாத் பொது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com