மாணவியிடம் 'ஐ லவ் யூ' என கூறியதாக தொடரப்பட்ட வழக்கு - ஐகோர்ட் கருத்து

போதிய ஆதாரம் இல்லாததால் விசாரணை நீதிமன்றம் ஏற்கனவே இளைஞரை விடுவித்திருந்தது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

ராய்ப்பூர்,

சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி மாவட்டத்தில் உள்ள குரூட் காவல் நிலையப் பிரிவில் 15 வயது சிறுமி ஒருவர், தான் வீட்டிற்குச் செல்லும் வழியில் இளைஞர் "ஐ லவ் யூ" என்று சொன்னதாகவும், இதற்கு முன்பும் பலமுறை தொல்லை கொடுத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார். அவரது புகாரின் அடிப்படையில், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இருப்பினும், போதிய ஆதாரம் இல்லாததால் விசாரணை நீதிமன்றம் ஏற்கனவே இளைஞரை விடுவித்திருந்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இளைஞர் சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டதாக சாட்சியங்களுடன் நிரூபிக்க முடியவில்லை. அவர் தவறான எண்ணத்தில் சிறுமியிடம் பழக முயற்சிக்கவும் இல்லை என்று தெரிய வந்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், கீழமை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை மேற்கோள்காட்டி, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து இந்த வழக்கில் இருந்து இளைஞர் விடுவிக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com