

புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து தமிழக அரசு நிறைவேற்றிய லோக் ஆயுக்தா சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகவும், ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா அமைப்புக்கு எந்தவித அதிகாரமும் இல்லாமல் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதால் இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி ராஜேந்திரன் என்பவர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் சிராஜூதீன் ஆஜரானார்.
விசாரணை தொடங்கியதும், இந்த மனு தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.