கரூரில் பலியான குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கிய வழக்கு: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அவகாசம்

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்யும் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் பலியாகினர்.
கரூர் கூட்ட நெரிசல்
Published on: 

புதுடெல்லி

கரூரில் நடந்த த.வெ.க. பிரசார கூட்டத்தின்போது நெரிசலில் சிக்கி பலியானவர் கள் குடும்பத்தைச் சேர்ந்த 31 பேருக்கு தமிழக அரசு வேலை வழங்கியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அரசு வேலை வழங்கிய உத்தரவை ரத்து செய்தது.இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மேல்முறை யீட்டு செய்தது. இந்த மனுவை நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மன்மோகன் அடங் கிய அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது.

இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப் பட்ட பதில் மனு நேற்று இரவுதான் கிடைக்கப்பெற்றது, விளக்க மனு தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் தேவை என்று தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வக் கீல் அபிஷேக் மனு சிங்வி கோரியதை ஏற்று, 4 வாரம் அவகாசம் வழங்கி விசார ணையை டிசம்பர் 8-ந்தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு தள்ளிவைத்து உத்தரவிட்டது ஐகோர்ட்டு தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆகஸ்டு 14-ந்தேதி இடைக்கால தடை விதித்தது நினைவுகூரத்தது.

X