

புதுடெல்லி,
டெல்லி வன்முறை சம்பவம் குறித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கிழக்கு டெல்லியில் நடந்து வரும் சம்பவங்கள், தூண்டி விடப்பட்டவையாக இருந்தாலும், தானாக நடந்திருந்தாலும் அதை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. கடந்த திங்கட்கிழமை தொடங்கி, இப்போதும் வன்முறை நீடித்து வருகிறது. டெல்லி போலீசின் மிகப்பெரிய தோல்வியையே இது காட்டுகிறது என்று அவர் கூறியுள்ளார்.