போலீசார் வீடுகளில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்: பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை

உத்தரபிரதேச மாநிலம் ஜலன் மாவட்டம் கொட்வாலி ஒடாய் பகுதியில் காவலர் குடியிருப்பு உள்ளது
போலீசார் வீடுகளில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்: பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஜலன் மாவட்டம் கொட்வாலி ஒடாய் பகுதியில் காவலர் குடியிருப்பு உள்ளது. இந்த காவலர் குடியிருப்பில் கல்பி பகுதி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உதய் பிரதாப் சிங் குடும்பத்துடன் வசித்து வந்தார். மேலும் அதே காவலர் குடியிருப்பில் ஜான்சி பகுதி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அசோக் குமாரும் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், இந்த இரு சப் இன்ஸ்பெக்டர்களின் வீட்டில் நேற்று யாரும் இல்லாத நேரத்தில் கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். இரு வீட்டுகளில் இருந்த பணம், நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் வீடுகளிலேயே கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com