‘சாதிவாரி கணக்கெடுப்பை சமூக நீதி கணக்கெடுப்பு என்று அழைக்கலாம்’ - அன்புமணி ராமதாஸ்

சுமார் 2 மாத காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடிக்க முடியும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
‘சாதிவாரி கணக்கெடுப்பை சமூக நீதி கணக்கெடுப்பு என்று அழைக்கலாம்’ - அன்புமணி ராமதாஸ்
Published on

திண்டுக்கல்,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு என்ற சொல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால், அதை சமூக நீதி கணக்கெடுப்பு என்று அழைக்கவும்.

மூன்று லட்சம் அரசு ஊழியர்களைக் கொண்டு, ரூ.500 கோடி பட்ஜெட்டில், சுமார் 2 மாத காலத்தில் கணக்கெடுப்பை நடத்தி முடிக்க முடியும். இது சாதி அல்லது மதம் சார்ந்த பிரச்சினை அல்ல, மாறாக சமூக நீதி தொடர்பான விஷயம். தி.மு.க.வின் துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com