காதலனுடன் வந்ததை கணவர் பார்த்ததால் அதிர்ச்சி அடைந்த பெண்.. அடுத்து நடந்த சம்பவம்


காதலனுடன் வந்ததை கணவர் பார்த்ததால் அதிர்ச்சி அடைந்த பெண்.. அடுத்து நடந்த சம்பவம்
x
தினத்தந்தி 19 Jun 2025 1:21 AM IST (Updated: 19 Jun 2025 5:20 AM IST)
t-max-icont-min-icon

தனது மனைவியை கையும் களவுமாக பிடிக்கும் நோக்கத்துடன் அந்த பெண்ணின் கணவர் அங்கு வந்ததாக கூறப்படுகிறது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் உள்ளது பராவத் நகரம். இங்குள்ள ஓட்டலுக்கு ஒரு பெண், தனது ஆண் நண்பருடன் வந்தார். சிறிது நேரத்தில் அங்கு வேறு சிலர் வந்தனர். அவர்களைப் பார்த்ததும் பதற்றம் அடைந்த அந்த பெண், ஓட்டலின் மாடிக்கு ஓடிச்சென்று அங்கிருந்து குதித்தார். பின்னர் தப்பி ஓடிவிட்டார்.

அந்த பெண்ணுடன் வந்த வாலிபரை மற்றவர்கள் சுற்றி வளைத்துப் பிடித்தனர். ஓட்டலுக்கு அந்த பெண்ணை பின் தொடர்ந்து வந்தது, பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் என்று தெரியவந்தது. அந்த பெண், தனது கள்ளக்காதலனுடன் ஓட்டலுக்கு வந்துள்ளார்.

இதை அறிந்த கணவர், தனது மனைவியை கையும் களவுமாக பிடிக்கும் நோக்கத்துடன் அங்கு வந்துள்ளார். உடனே ஓட்டல் கூரையில் இருந்து குதித்து அந்த பெண் தப்பி ஓடிவிட்டார். அவர் ஓட்டல் கூரையில் இருந்து குதிக்கும் வீடியோ காட்சிகள் வெளியானது. அந்த பெண்ணின் கணவர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

தனது மனைவிக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், போலியாக தன் மீது புகார்கள் கொடுப்பதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் போலீசில் கூறி உள்ளார். போலீசார் அந்த பெண்ணுடன் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story