காவிரி விவகாரம்: வரைவு திட்டம் தயார் மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற முடியவில்லை- மத்திய அரசு

காவிரி விவகாரம் வரைவு திட்டம் தயார் மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற முடியவில்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது. #CauveryIssue #SupremeCourt
காவிரி விவகாரம்: வரைவு திட்டம் தயார் மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற முடியவில்லை- மத்திய அரசு
Published on

புதுடெல்லி

காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் முடிவடையும் நிலையில், இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

காவிரி வழக்கு விசாரணையை நேரில் பார்வையிட சுப்ரீம் கோர்ட்டுக்கு சி.வி. சண்முகம் வருகை தந்துள்ளார். அதிமுக எம்பிக்கள் நவநீதகிருஷ்ணன், சுந்தரம், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரமும் வருகை தந்து உள்ளனர்.

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தொடங்கியது. வழக்கு தொடங்கியதும் மத்திய அரசு சார்பில் காவிரி வழக்கில் வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டில் கால அவகாசம் கேட்டு உள்ளது. மேலும் வரைவு திட்டம் தயாராகி விட்டது. கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் இருப்பதால் மத்திய அமைச்சரவையின் ஓப்புதல் பெற முடியவில்லை என தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com