காவிரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 21-ம் தேதி விசாரணை

காவிரி வழக்கு வரும் 21-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.
காவிரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 21-ம் தேதி விசாரணை
Published on

புதுடெல்லி,

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. இந்த நிலையில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு வரும் 21-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது. தமிழகம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவிருந்த நிலையில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

மேலும் காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரிய வழக்கை அடுத்த வாரம் விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது.

நீதிபதிகள் கவாய், நரசிம்மா, மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3 நீதிபதிகள் அமர்வில் நீதிபதி நரசிம்மா தற்போது விடுப்பில் உள்ளார்; அடுத்த வாரம் நீதிபதி கவாய் விடுப்பில் செல்ல உள்ளதாக  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கு வரும் 21ம் தேதி விசாரிக்கப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com