

புதுடெல்லி,
காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை திறக்கக் கோரி தமிழக அரசு ஏற்கனவே தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், தமிழக அரசு சார்பில் வக்கீல் பா.கருணாகரன் கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், நிலுவையில் உள்ள 15.02 டி.எம்.சி. நீரை திறக்க கர்நா டக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அடுத்த 10 நாட்களுக்கு நாளொன்றுக்கு 1.30 டி.எம்.சி. வீதம் நீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கடந்த 24-ந்தேதி பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட் டுள்ளது.கடந்த 24-ந்தேதி முதல் அக்டோபர் 7-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் வழங்கப்படாத நீரால் ஏற்பட்ட 0.940 டி.எம்.சி. பற்றாக்குறையை ஈடுசெய்யவும், அக்டோபர் 8-ந்தேதி கூட்டக் குறிப்புகளில் ஆணையம் தெரிவித்துள்ளபடி தொடர்ந்து நீர்வரத்தை உறுதி செய்யவும் கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு தனது கூடுதல் மனுவில் கோரியுள்ளது.