29-ந்தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50-வது கூட்டம் வருகிற 29-ந்தேதி நடைபெற உள்ளது.
29-ந்தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
Published on

புதுடெல்லி,

காவிரி நதிநீரை கர்நாடகம், தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 4 மாநிலங்களும் பிரச்சினை இன்றி பகிர்ந்து கொள்வதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு கடந்த 2018-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அப்போதிலிருந்து தற்போது வரை இந்த இரு அமைப்புகளும் அவ்வப்போது கூடி நதிநீர் பிரச்சினைகளை தீர்த்து வருகின்றன. இந்த வகையில் மேலாண்மை ஆணையம் 49 முறை கூட்டப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக 50-வது கூட்டம் வருகிற 29-ந்தேதி நடைபெற உள்ளது. ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க 4 மாநிலங்களின் அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுத்து உள்ளனர். இதில் அதிகாரிகள் நேரிலோ அல்லது காணொலி வாயிலாகவோ கலந்து கொள்வார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com