காவிரி நீர் பிரச்சினை: கர்நாடகாவில் ஆகஸ்ட் 23-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் - டி.கே.சிவகுமார் அறிவிப்பு

கர்நாடகாவில் ஆகஸ்ட் 23-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அம்மாநில துணை முதல்-மந்திரி சிவக்குமார் கூறியுள்ளார்
காவிரி நீர் பிரச்சினை: கர்நாடகாவில் ஆகஸ்ட் 23-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் - டி.கே.சிவகுமார் அறிவிப்பு
Published on

பெங்களூரு,

தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக விவசாயிகள், அரசியல் தலைவர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் தண்ணீர் திறப்பை நிறுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பெங்களூருவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று துணை முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் ஆகஸ்ட் 23-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும். அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தமிழகத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மழை குறைவு காரணமாக இங்குள்ள விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற கடினமான சூழ்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்க வேண்டியது அரசின் கடமை. சுப்ரீம் கோர்ட்டில் நாளை காவிரி வழக்கை எதிர்கொள்ள உரிய வாதங்களுடன் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்திற்கு நீர் வழங்க கர்நாடக பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழலில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com