காவிரி நீர் பங்கீடு தொடர்பான கூட்டம்: 2 நாட்கள் நடக்கிறது

காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 111-வது கூட்டம் இன்று நடக்க இருக்கிறது.
காவிரி நீர் பங்கீடு தொடர்பான கூட்டம்: 2 நாட்கள் நடக்கிறது
Published on

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகிய அமைப்புகள் அவ்வப்போது கூடி காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினைகள் தொடர்பாக விவாதித்து தீர்வு கண்டு வருகின்றன. இதன் அடிப்படையில் காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 111-வது கூட்டம் இன்று (புதன்கிழமை) நடக்க இருக்கிறது. இதைப்போல நாளை (வியாழக்கிழமை) காவிரி மேலாண்மை ஆணையத்தின் 37-வது கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டங்களில் பங்கேற்கும்படி தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம் மற்றும் கேரளா ஆகிய காவிரியோடு தொடர்புடைய 4 மாநிலங்களுக்கும் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் மற்றும் ஒழுங்காற்றுக்குழு தலைவர் வினீத் குப்தா ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com