வருமான வரித் தாக்கலில் 25 சதவீத அதிகரிப்பு - மத்திய நேரடி வரி வாரியம் தகவல்

கடந்த ஆண்டை விட இவ்வாண்டில் 25 சதவீதம் வரையில் வரித் தாக்கல் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று மத்திய நேரடி வரி வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.
வருமான வரித் தாக்கலில் 25 சதவீத அதிகரிப்பு - மத்திய நேரடி வரி வாரியம் தகவல்
Published on

புதுடெல்லி

இந்த அதிகரிப்பின் பின்னணியில் பொருளதார சீர்திருத்தங்கள் இருப்பதாகவும், குறிப்பாக பண மதிப்பு நீக்கம் மற்றும் வருமான வரித் துறையின் ஆபரேஷன் க்ளீன் மணி என்ற செயல்திட்டமும் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்தாண்டு 2,226,97,843 பேர் வருமான வரித் தாக்கல் செய்திருந்தனர். அதே காலகட்டத்தில் இவ்வாண்டில் 2,82,92,955 பேர் வருமான வரித் தாக்கல் செய்துள்ளனர். இதில் தனிநபர்களாக வருமான வரித் தாக்கல் செய்தவர்கள் 2,79,39,083 பேர்களாவர். கடந்தாண்டில் 2,22,92,864 பேர் வருமான வரித் தாக்கல் செய்திருந்த நிலையில் இவ்வாண்டு 25.3 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பிற்கு பணமதிப்பு நீக்க நடவடிக்கையே காரணம் எனப்படுகிறது.

தனிநபர்களில் முன் கூட்டியே வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் 41.79 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் தானே மதிப்பீடு செய்து வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கையும் 34.25 சதவீதம் அதிகரித்துள்ளது. இப்போக்கு வரி ஏய்ப்பையும், கறுப்புப் பண புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளின் விளைவாகவே எழுந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com