

புதுடெல்லி,
மத்திய அரசு இதையடுத்து இருவரையும் கட்டாய விடுப்பில் செல்லும்படி உத்தரவிட்டது. மேலும், சி.பி.ஐ.யின் இடைக்கால இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.
மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுங்கிலான் பூர்வல் என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இப்பிரச்சினை தொடர்பாக பாதிக்கப்பட்ட இருவருமே சுப்ரீம் கோர்ட்டை அணுகி உள்ளனர். மேலும் இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. எனவே இதில் எங்களால் தலையிட இயலாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.