ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக ரெயில்வே அதிகாரி கைது

அசாமில் ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற முயன்ற ரெயில்வே அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக ரெயில்வே அதிகாரி கைது
Published on

கவுகாத்தி,

ரயில்வே ஒப்பந்தங்களை சாதகமாக வழங்குவதற்காக ரூ.1 கோடி லஞ்சம் வாங்கிய, ரயில்வே பொறியாளர் சேவை பிரிவு(ஐஆர்இஎஸ்) அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

அசாம் மாநிலம் மலிகோவானில் உள்ள வடகிழக்கு முன்னணி ரயில்வேயில், பணிபுரிபவர் மகேந்தர் சிங் சவுகான். இவர், 1985ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த ஐஆர்இஎஸ்(IRES) அதிகாரி ஆவார்.

இவர், ரயில்வே ஒப்பந்தத்தை, தனியாருக்கு வழங்குவதில் சாதகமாக நடந்து கொள்வதற்காக ரூ.1 கோடி லஞ்சம் பெற முயன்ற போது, சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இவ்விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் 22 இடங்களில் சோதனையும் நடத்தப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com