யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மீது சி.பி.ஐ. புதிய வழக்கு

யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மீது சி.பி.ஐ. புதிய வழக்கினை பதிவு செய்துள்ளது.
யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மீது சி.பி.ஐ. புதிய வழக்கு
Published on

புதுடெல்லி,

யெஸ் வங்கியில் கவுதம் தப்பார் என்பவரின் அவந்தா ரியாலிட்டி என்ற நிறுவனத்துக்கு நிபந்தனைகளை தளர்த்தி ரூ.2 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ. யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர், அவரது மனைவி பிந்து, கவுதம் தப்பார் ஆகியோர் மீது புதிய வழக்கு பதிவு செய்தது. இதுதொடர்பாக டெல்லி, மும்பையில் பல்வேறு இடங்களில் உள்ள ராணா கபூரின் வீடு, அலுவலகங்கள், பிந்துவுக்கு சம்பந்தப்பட்ட பிலிஸ் அபோட் அலுவலகம், தப்பாரின் வீடு, நிறுவனங்கள், இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் ஆகிய இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com