சித்ரா ராமகிருஷ்ணா உட்பட மூவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது சிபிஐ....!

சித்ரா ராமகிருஷ்ணா உட்பட மூவருக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் இன்று அனுப்பியுள்ளது.
சித்ரா ராமகிருஷ்ணா உட்பட மூவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது சிபிஐ....!
Published on

புதுடெல்லி,

தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனராக கடந்த 2013 முதல் 2016-ம் ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ணன் பணியாற்றி வந்தார். அப்போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) குற்றம் சாட்டியது. முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியன் என்பரை, தலைமை வியூக அதிகாரியாக நியமித்ததுடன், பிற சலுகைகள் வழங்கியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மும்பையில் உள்ள, சித்ரா ராமகிருஷ்ணன் வீடு உட்பட, அவருக்கு தொடர்புடைய அலுவலகங்களில், மும்பை வருமான வரி புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதேபோல ஆனந்த் சுப்பிரமணியத்திற்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடந்தது.

தேசிய பங்கு சந்தையின் நிதி மற்றும் வணிகத் திட்டங்கள், ஈவுத்தொகை காட்சிகள் மற்றும் நிதி முடிவுகள் உள்ளிட்ட சில உள் ரகசியத் தகவல்களை தன்னை வழி நடத்தும் இமயமலையில் உள்ள ஒரு யோகியுடன், சித்ரா ராமகிருஷ்ணா பகிர்ந்து கொண்டதாகவும், பரிமாற்றத்தின் ஊழியர்களின் செயல்திறன் மதிப்பீடுகள் குறித்தும் அவரிடம் கலந்தாலோசித்ததாகவும் கூறப்பட்டு உள்ளது. இதுதொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், தேசிய பங்கு சந்தை விவரங்களை கசியவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக சித்ரா ராமகிருஷ்ணா அவரது முன்னாள் முதலாளி ரவி நரேன் மற்றும் அவரது சகோதரர் ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோருக்கு எதிராக மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) இன்று லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் மூவரில் யாரும் நாட்டை விட்டு வெளியேற முடியாது என்பதை உறுதி செய்வதற்காக எல்ஓசி பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் சித்ரா ராம்கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மேலும் இமயமலை யோகி சித்ரா ராமகிருஷ்ணன் இடையேயான பல்வேறு மின்னஞ்சல்களை சிபிஐ ஆய்வு செய்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com