

புதுடெல்லி,
ஐ.என்.எக்ஸ். நிறுவன முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், கடந்த 28-ந் தேதி சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். அவர் முதலில் ஒரு நாளும், பின்னர் மேலும் 5 நாட்களும், அடுத்து 3 நாட்கள், பின்னர் 3 நாட்கள் என காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
சிபிஐ காவலில் கார்த்தி சிதம்பரம் இருந்த நாட்களில், அவரிடம் துருவி துருவி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கார்த்தி சிதம்பரத்தின் காவல் முடிந்த நிலையில், இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, கார்த்தி சிதம்பரத்தை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கக்கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே, சிறையில் பாதுகாப்பு அளிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செயய்ப்பட்டுள்ளது.