

புதுடெல்லி,
மத்திய புலனாய்வு அமைப்பு சி.பி.ஐ.யில் அதன் இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து மத்திய அரசு இருவருக்கும் விடுப்பு அளித்து உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து, கடந்தாண்டு அக்டோபர் 24-ம் தேதி ஐ.பி.எஸ். அதிகாரி நாகேஷ்வர் ராவை மத்திய அரசு தற்காலிக சிபிஐ இயக்குநராக நியமித்தது. இதன்பிறகு நாகேஷ்வர ராவ், பொருளாதாரக் குற்றப்பிரிவில் இருந்த சதீஷ் தாகரை டெல்லியில் உள்ள ஊழல் தடுப்புப் பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக் குழுவில் அங்கம் வகித்திருந்த சி.பி.ஐ. எஸ்.பி., சதீஷ் தாகர் இன்று விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளார்.
அதில் தாமாக முன்வந்து ஓய்வு பெறுவதாகவும், தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை சி.பி.ஐ. செய்தித்தொடர்பாளர் இன்று வெளியிட்டுள்ளார்.