ஜார்கண்ட் தேர்வு முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. விசாரணை; மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

ஜார்கண்டில் மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மகதோ தலைமையில் நேற்று தேர்வு சீர்திருத்த யாத்திரை ஒன்றும் தொடங்கப்பட்டது.

ஜார்கண்ட் தேர்வு முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. விசாரணை; மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
Published on

ராஞ்சி

ஜார்கண்ட் தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட ஜே.எஸ்.எஸ்.சி.-சி.ஜி.எல். தேர்வில் முறைகேடு நடந்துள்ளது என குற்றச்சாட்டு கூறி மாணவர்கள் அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. மாணவர்கள் 24 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் ஒரு பிரிவினர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

சீர்திருத்தம் தேவை

அப்போது, தேர்வு நடைமுறையில் சீர்திருத்தம் தேவை என்றும் வலியுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அரசு பணியாளர் நியமன தேர்வை ரத்து செய்து முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் உத்தரவிட்டார். இதனால், 16 நாட்களாக நடந்து வந்த உண்ணாவிரத போராட்டம் முடித்து கொள்ளப்படுகிறது என மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்த உத்தரவுக்கு மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மகதோ வரவேற்பு தெரிவித்ததுடன், எதிர்காலத்தில், வினாத்தாள் கசிவுகளை தடுக்கும் வகையில் தேர்வு கட்டமைப்புகளில் சீர்திருத்தம் மற்றும் பிற முறைகேடுகளை தடுக்க வேண்டியது தேவை என வலியுறுத்தினார். இதேபோன்று இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கும் மாணவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

சி.பி.ஐ. விசாரணை

எனினும், தேர்வு ரத்து தொடர்பான சில நோட்டீஸ்களுக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இதனால், அதிருப்தியடைந்த மாணவர்கள் அரசு தங்களை மோசடி செய்து விட்டது என கூறியதுடன், கடந்த வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சி.ஐ.டி.க்கு பதிலாக, பாரபட்சமற்ற விசாரணைக்காக சி.பி.ஐ.யிடம் விசாரணையை ஒப்படைக்கக்கோரி, ஹரிசரண் தேவ்கன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

யாத்திரை

இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகள், ஜார்கண்ட் அரசு பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த சூழலில், அரசு பணிக்கு இடையூறு ஏற்படுத்துதல் மற்றும் போலீசாரை தாக்கியது தொடர்பாக இதுவரை 3 எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அவற்றில் 28 பேரின் பெயர்களும், அடையாளம் தெரியாத 900 பேரும் சேர்க்கப்பட்டு உள்ளனர். மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மகதோ தலைமையில் நேற்று தேர்வு சீர்திருத்த யாத்திரை ஒன்றும் தொடங்கப்பட்டது. இதில், அனைத்து மாவட்டங்களிலும் யாத்திரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com