மனேசர் நிலமோசடி வழக்கு: ஹரியானா முன்னாள் முதல் மந்திரியிடம் சிபிஐ விசாரணை

மனேசர் நிலமோசடி வழக்கு: ஹரியானா முன்னாள் முதல் மந்திரியிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
மனேசர் நிலமோசடி வழக்கு: ஹரியானா முன்னாள் முதல் மந்திரியிடம் சிபிஐ விசாரணை
Published on

புதுடெல்லி,

ஹரியாணா மாநிலம் மனேசர், நவுரங்கபூர் மற்றும் லக்நவுலா பகுதியில் உள்ள சுமார் 912 ஏக்கர் வேளாண் நிலங்களை அரசு கையகப்படுத்தி தெழிற்சாலை கட்டவுள்ளதாக நில உரிமையாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் கடந்த 2004-ல் நேட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து நில உரிமையாளர்களும், விவசாயிகளும், தனியார் பில்டர்கள் கேட்ட செற்ப தெகைக்கு 400 ஏக்கர் வரையிலான நிலங்களை அவசர, அவசரமாக விற்றனர். பின்னர் 2007-ல் தனியார் பில்டர்கள் அந்த நிலங்களை விற்க வசதியாக கையகப்படுத்தும் நேட்டீஸை அரசு திரும்ப பெற்றுக் கெண்டது.

இதனால் விவசாயிகளும், நில உரிமையாளர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் ரூ.1,500 கேடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வெறும் ரூ.100 கேடிக்கு தனியார் பில்டர்களிடம் விற்க வைத்துவிட்டதாக விவசாயிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த சிபிஐ, அரசு அதிகாரிகளின் துணையுடன், தனியார் பில்டர்கள் இந்த சதியில் ஈடுபட்டதை கண்டறிந்தது. மேலும் அப்பேது முதல்வராக பதவி வகித்த காங்கிரஸ் தலைவர் பூபிந்தர் சிங் ஹுடாவுக்கும் இந்த சதியில் தெடர்பு இருந்ததா கவும், இதற்காக அவருக்கு சட்ட விரேதமான முறையில் கேடிக் கணக்கில் பணப் பரிமாற்றம் செய் யப்பட்டதாகவும் தெரியவந்தது. இந்த குற்றச்சாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஹரியானா முன்னாள் முதல் மந்திரி புபீந்தர் சிங் ஹூடாவிடம் சிபிஐ இன்று விசாரணை நடத்தி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com