ரூ.2,348 கோடி வங்கி கடன் மோசடி: தனியார் நிறுவன அலுவலகங்களில் சி.பி.ஐ. சோதனை

ரூ.2,348 கோடி வங்கி கடன் மோசடி புகாரில் தனியார் நிறுவன அலுவலகங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தினர்.
ரூ.2,348 கோடி வங்கி கடன் மோசடி: தனியார் நிறுவன அலுவலகங்களில் சி.பி.ஐ. சோதனை
Published on

வங்கியில் கடன் வாங்கி விட்டு திரும்ப செலுத்திடாமல், பூஷண் ஸ்டீல் மற்றும் பவர் லிமிடெட் என்ற இரும்பு மற்றும் மின் உற்பத்தி நிறுவனம் அனுமதிக்க இயலாத அளவான ரூ.2,348 கோடிக்கு மோசடி செய்துள்ளது என புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சி.பி.ஐ. அந்த நிறுவனம் மீதும், அதன் இயக்குனர்கள், அடையாளம் தெரியாத அரசு அலுவலர்கள் மற்றும் சில தனிநபர்கள் மீது வழக்கு பதிவு செய்தது.

டெல்லி, சண்டிகார், கொல்கத்தா போன்ற பல இடங்களில் உள்ள அந்த நிறுவனத்தின் அலுவலகங்கள், இயக்குனர்களின் வீடுகள் உள்பட பல இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com