சி.பி.ஐ. 4,100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மீது ஊழல் வழக்குகள் பதிவு

சி.பி.ஐ. கடந்த 3 வருடங்களில் 4,100க்கும் கூடுதலான அரசு ஊழியர்கள் மீது ஊழல் வழக்குகளை பதிவு செய்துள்ளது.
சி.பி.ஐ. 4,100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மீது ஊழல் வழக்குகள் பதிவு
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வ பதிலளித்த மத்திய பணியாளர்கள் துறை இணை மந்திரி ஜிதேந்திரா சிங், கடந்த 2016, 2017 மற்றும் 2018 ஆகிய 3 ஆண்டுகளில் 4,123 அரசு ஊழியர்கள் மீது 1,767 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன என சி.பி.ஐ. தெரிவித்து உள்ளது.

இந்த 1,767 வழக்குகளில் 900 வழக்குகள் மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. 59 வழக்குகளில் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது. 89 வழக்குகள் மூடப்பட்டு விட்டன அல்லது கைவிடப்பட்டு விட்டன.

19 வழக்குகளில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு விட்டன. 9 வழக்குகள் விடுவிக்கப்பட்டன என தகவல் தெரிய வந்துள்ளது. ஊழலை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com