வைர வியாபாரி மெகுல் சோக்சிக்கு எதிராக மேலும் 3 வழக்குகளை பதிவு செய்தது சி.பி.ஐ.

மெகுல் சோக்சி மீது சி.பி.ஐ. மேலும் 3 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
வைர வியாபாரி மெகுல் சோக்சிக்கு எதிராக மேலும் 3 வழக்குகளை பதிவு செய்தது சி.பி.ஐ.
Published on

புதுடெல்லி,

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்கிளை அதிகாரிகளை பயன்படுத்தி, ரூ.13 ஆயிரத்து 500 கோடி கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி மெகுல் சோக்சி, டோமினிகா நாட்டில் உள்ள ஆன்டிகுவா தீவில் தஞ்சம் அடைந்தார்.

இந்த நிலையில் மெகுல் சோக்சி மீது சி.பி.ஐ. மேலும் 3 வழக்குகளை பதிவு செய்துள்ளது. பஞ்சாப் தேசிய வங்கியின் துணை மேலாளர் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதோடு மெகுல் சோக்சி மற்றும் அவரது நிறுவனத்தின் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com