

புதுடெல்லி
மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவியில் இருந்தபோது கடந்த 2006-ம் ஆண்டில் ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனத்தை மலேசியாவை சேர்ந்த மாக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது.
இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து ஏர்செல் மாக்சிஸ் விவகாரம் குறித்து அமலாக்கப்பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சி.பி.ஐ. அமைப்பும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு உள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு இன்று (வியாழக்கிழமை) ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.