கெஜ்ரிவாலுக்கு எதிராக கபில் மிஸ்ரா அளித்து உள்ள 3 ஊழல் புகார்கள் ஆராயப்படும் என சி.பி.ஐ. அறிவிப்பு

புதுடெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் மீது கபில் மிஸ்ரா 3 ஊழல் புகார்கள் அளித்துள்ளார். அதுகுறித்து ஆராயப்படும் என சி.பி.ஐ. கூறி உள்ளது.
கெஜ்ரிவாலுக்கு எதிராக கபில் மிஸ்ரா அளித்து உள்ள 3 ஊழல் புகார்கள் ஆராயப்படும் என சி.பி.ஐ. அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் பணியாற்றி அரசியலுக்கு வந்து டெல்லி முதல்-மந்திரி பதவியை கைப்பற்றியவர் அரவிந்த் கெஜ்ரிவால். இப்போது அவருக்கு எதிராக, அவரது மந்திரிசபையில் இடம் பெற்று சமீபத்தில் நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி இருப்பது, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வெள்ளிக்கிழமையன்று சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயினிடம் இருந்து ரூ.2 கோடியை தனது வீட்டில் வைத்து லஞ்சமாக பெற்றார் என்பது கபில் மிஸ்ராவின் குற்றச்சாட்டு.

இந்த குற்றச்சாட்டை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது. ஆனால் கெஜ்ரிவால் மீது கபில் மிஸ்ரா ஊழல் தடுப்பு போலீசில் புகார் செய்தார்.

இந்த நிலையில் கெஜ்ரிவாலுக்கு எதிராக சி.பி.ஐ.யிடமும் கபில் மிஸ்ரா நேற்று 3 புகார்களை அளித்துள்ளார். கபில் மிஸ்ரா அளித்துள்ள புகார்கள் குறித்து சி.பி.ஐ. கருத்து தெரிவித்தது. இந்த புகார்கள் குறித்து பரிசீலிக்கப்படும் என சி.பி.ஐ. கூறியது. இது தொடர்பாக சி.பி.ஐ. செய்தி தொடர்பாளர் ஆர்.கே.கவுர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டெல்லி தேசிய தலைநகர் பகுதி நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் மீது முன்னாள் நீர்வளம், சுற்றுலாத்துறை மந்திரி கபில் மிஸ்ரா 3 புகார்களை அளித்துள்ளார். அவற்றை சி.பி.ஐ. ஆராயும் என கூறப்பட்டுள்ளது.

சத்யேந்தர் ஜெயினிடம் இருந்து ரூ.2 கோடியை அரவிந்த் கெஜ்ரிவால் பெற்றதாக முதல் புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இரண்டாவது புகாரில் சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின், கெஜ்ரிவால் உறவினருக்காக நில பேரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது இடம்பெற்று உள்ளது.

மூன்றாவது புகாரானது 5 ஆம் ஆத்மி தலைவர்கள் ராகவ் சந்திரா, சத்யேந்தர் ஜெயின், சஞ்சய் சிங், அஷிஷ் கதிதான் மற்றும் துர்கேஷ் பாண்டேவின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பானது என தகவல்கள் தெரிவித்து உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com