

புதுடெல்லி,
சிபிஎஸ்இ 10-வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 19.8 லட்சம் மாணவ - மாணவிகள் தேர்வு எழுதி இருந்தனர். இந்நிலையில் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 3-ம் தேதி) வெளியிடப்பட்டது. . தேர்வு முடிவுகளை www.cbse.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
அலகாபாத், திருவனந்தபுரம் டோராடூன், சென்னை டெல்லி மண்டல முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 96.21 சதவீதம் ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு 90.95 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5.26 சதவீதம் குறைவு ஆகும். திருவனந்தபுரம் மண்டலம் 99.85 தேர்ச்சி விகிதம் பெற்று முதலிடம் வகிக்கிறது.