சிபிஎஸ்இ 10-ம் வகுப்புக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு


சிபிஎஸ்இ 10-ம் வகுப்புக்கு ஆண்டுக்கு 2 முறை  பொதுத் தேர்வு
x

பிப்ரவரி மாதம் நடத்தப்படும் தேர்வில் மாணவர்கள் பங்கேற்பது கட்டாயம், மே மாத தேர்வில் மாணவர்கள் விரும்பினால் பங்கேற்கலாம் என்று சிபிஎஸ்இ கூறியுள்ளது.

புதுடெல்லி,

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026 ஆம் ஆண்டு முதல் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை நடத்த உள்ளது. மத்திய இடை நிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ- யில் வரும் கல்வி ஆண்டு முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

2026 முதல் சிபிஎஸ்இ 10-ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு நடத்த தேர்வு கட்டுப்பாட்டு தலைவர் சன்யாம் பரத்வாஜ் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்ட தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதமும், இரண்டாம் கட்ட முடிவுகள் ஜூன் மாதமும் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

இரண்டு கட்ட பொதுத்தேர்வில் முதல் கட்ட தேர்வை தேர்வர்கள் எழுதுவது கட்டாயம் எனவும், இரண்டாவது பொதுத்தேர்வை எழுதுவது அவர்களது விருப்பம் எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. முதல் பொதுத்தேர்வில் குறைவாக மதிப்பெண்கள் எடுத்தாலும் கூடுதல் மதிப்பெண்கள் பெற முடியும். கணிதம், அறிவியல், சமூக அறிவியல், மொழிப்பாடம் ஆகியவற்றில் ஏதேனும் மூன்றில் தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றார். தற்போது வரை பொதுத்தேர்வை ஒருமுறை மட்டுமே மாணவர்கள் எழுதி வரும் நிலையில், வரும் ஆண்டில் முதல் முறையாக அமல்படுத்தப்படும் இந்த புதிய முறை மாணவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story