

புதுடெல்லி
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் ஜனவரி முதல் திறக்கப்பட்டு வருகின்றன. இடைப்பட்ட காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாத காரணத்தால் சிபிஎஸ்இ பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டன.
இந்நிலையில் நாடு முழுவதுமுள்ள சிபிஎஸ்இ கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுடன் காணொலி கூட்டத்தில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கலந்துரையாடினார். பின்னர்
நடப்பு கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வருகிற பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியிடப்படும் என அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் வெளியிட்டார். மேலும் 45 ஆண்டு கால சிபிஎஸ்இ மாணவர்களின் ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும்.
இது 1975 க்குப் பிறகு பதிவுசெய்தவர்களுக்கு சான்றிதழ்களை எளிதில் பெற உதவும். மேலும், நெப்2020 இன் இலக்குகளை அடைய சிபிஎஸ்இ வரும் ஆண்டில் 10 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் என் கூறினார்.