

புது டெல்லி,
சிபிஎஸ்இ தனது ஆன்லைன் விடைத்தாள் மதிப்பீட்டு முறைக்கான டெண்டர் விதிகளை மாற்றி, ஒரு குறிப்பிட்ட நிறுவனமான 'கோயம்ப்ட்க்கு கிடைக்கும் வகையில் செயல்பட்டதை சார்தக் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார் .
இந்த இளைஞர்களின் துணிச்சலான விசாரணையை தொடர்ந்து, நிர்வாக குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று அப்போதைய சிபிஎஸ்இ வாரியத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டாளர்கள் மீது மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
சிபிஎஸ்இ-இன் ஆரம்பகால டெண்டர் விதிகளில், ஒரு நிறுவனம் இதற்கு முன்பு நடத்திய பொதுத்தேர்வுகளில் ஏதேனும் குளறுபடிகள் செய்திருந்தாலோ அல்லது அதன் மோசமான செயல்பாட்டின் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தாலோ, அந்த நிறுவனம் டெண்டரில் பங்கேற்க முடியாது என்ற மூன்று கடுமையான பிரிவுகள் இருந்தது ஆனால், 2025 ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்ட புதிய டெண்டரில், இந்த மூன்று விதிகளும் நீக்கப்பட்டது.
ஜதராபாத்தை தலைமையாக கொண்டு இயங்கும் கோயம்ப்ட் எடுடெக் நிறுவனம், முன்பு குளோபாரீனா என்ற பெயரில் இயங்கிய போது 2019-யில் நடைபெற்ற தெலங்கானா தேர்வு விவகாரத்தில் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சியடையவில்லை என தவறாக அறிவிக்கப்பட்டது. இதனால் 23 மாணவர்களின் தற்கொலை செய்து கொண்டனர்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-
சார்தக்கிற்கு வயது 18தான் - ஆனால் சிந்தனை, துணிச்சல் மற்றும் கொள்கைகளில் அவன் யாருக்கும் சளைத்தவன் அல்ல. நாட்டின் பெரிய ஊடக நிறுவனங்களாலும் புலனாய்வு பத்திரிகையாளர்களாலும் செய்ய முடியாத ஒன்றை அவனும் அவனது கூட்டாளி நிசர்காவும் செய்தார்கள்; அதாவது, சிபிஎஸ்இ மற்றும் கோயம்ப்ட் (COEMPT) ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு சதியை அவர்கள் நாட்டுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார்கள்.
நமது இளைஞர்கள் தொடர்ந்து 'ரீல்ஸ்' செய்துகொண்டும், பக்கோடா பொரித்துக்கொண்டிருக்க வேண்டும் என்றும், கேள்விகள் கேட்காமலும் கண்களை திறக்காமலும் இருக்க வேண்டும் என்றும் மோடி விரும்புகிறார். ஆனால், இந்த இளைஞர்கள் கேள்விகளை எழுப்பினார்கள்; அதற்கான விடைகளையும் கண்டறிந்தார்கள்.
நாட்டின் 18 வயது இளைஞன் சிபிஐ-யையே முந்தினான் - இளைஞர்களின் இந்த வெற்றி உண்மையில் அரசாங்கத்தின் தோல்வியே ஆகும். இதுதான் இந்தியாவின் உண்மையான இளைஞர் சக்தி - ஆர்வமும், விழிப்புணர்வும், தெளிவான புரிதலும் கொண்ட சக்தி. நினைவில் கொள்ளுங்கள், நாட்டின் எதிர்காலத் தலைமுறை எந்தவொரு ஏமாற்று வேலைக்கும் இரையாகாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.