

புதுடெல்லி,
கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளால் மீண்டும் திறக்கப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த டிசம்பர் மாதம் தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 8ஆம் தேதி 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் பள்ளிகளை தொடங்குவதற்கு சிபிஎஸ்இ அனுமதி அளித்துள்ளது. மேலும் மாநில அரசின் அனுமதியோடு, நடப்பு கல்வி ஆண்டில் முன்கூட்டியே பள்ளிகளை திறக்கவும் சிபிஎஸ்இ அனுமதி வழங்கி உள்ளது.