

புதுடெல்லி,
10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெறுவதை எளிமையாக்கும் விதத்தில் புதிய மதிப்பெண் திட்டத்தை சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தி உள்ளது. தற்போதுபொதுத்தேர்வில் 33%மதிப்பெண், செயல்முறை தேர்வில் 33%மதிப்பெண் பெறுவது கட்டாயமாகஉள்ளது.
அதனை மாற்றி எழுத்துத்தேர்வு,செயல்முறைதேர்வு இரண்டிலும்சேர்த்து 33%மதிப்பெண் பெற்றால்போதும் என்று மாற்ற திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மதிப்பெண் திட்டம் இந்தாண்டு மற்றும் அடுத்த ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
மதிப்பெண் திட்டம் குறித்த சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.