சிபிஎஸ்இ பிளஸ்-2 மறுமதிப்பீடு விண்ணப்பம்: அவகாசம் நீட்டிப்பு!

இந்த வசதியை விடைத்தாள் நகல் பெற்ற மாணவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
சிபிஎஸ்இ பிளஸ்-2 மறுமதிப்பீடு விண்ணப்பம்: அவகாசம் நீட்டிப்பு!
Published on

டெல்லி,

பிளஸ்-2 விடைத்தாள் பிரச்சினை (விடைத்தாளில் பக்கங்கள் மற்றும் கூடுதல் விடைத்தாள், வரைபடம், கிராப்ஸ் காணாமல் போயிருப்பது) மற்றும் மறுமதிப்பீட்டுக்கான இணையவழி விண்ணப்ப பதிவு கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) தொடங்கியது. விடைத்தாள் தொடர்பான பிரச்சினைக்கும், மதிப்பீட்டில் திருப்தி இல்லாத மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கும் விண்ணப்பிக்கலாம். விடைத்தாளில் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விரும்பினால் அனைத்து பிரச்சினைக்கும் ஒரேயொரு விண்ணப்பம் போதுமானது. தனித்தனி விண்ணப்பம் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கால அவகாசம்

இந்த வசதியை விடைத்தாள் நகல் பெற்ற மாணவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். விடைத்தாள் பிரச்சினைக்கு ஒரு பாடத்துக்கு கட்டணம் ரூ. 100 மறுமதிப்பீட்டுக்கு கட்டணம் ரூ. 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உரிய கட்டணத்தை யுபிஐ, கிரெடிட் அட்டை, டெபிட் அட்டை மற்றும் நெட்பேங்கிங் வசதி மூலம் இணையவழியில் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இணையவழியில் விண்ணப்பிக்க கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று (ஜூன் 7) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com