டெல்லி கலவரத்தால் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு சி.பி.எஸ்.இ. அறிவிப்பு

டெல்லி கலவரத்தால் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
கோப்புக்காட்சி
கோப்புக்காட்சி
Published on

புதுடெல்லி,

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் நடந்து வருகின்றன. வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்தால், டெல்லியை சேர்ந்த மாணவர்கள் பலர், தேர்வை தவற விட்டனர். அவர்களுக்காக மறுதேர்வு நடத்த சி.பி.எஸ்.இ. முன்வந்துள்ளது.

கலவரத்தால் தேர்வு எழுத இயலாத மாணவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட சி.பி.எஸ்.இ. பிராந்திய அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்குமாறு பள்ளி முதல்வர்களை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

அவர்களுக்கான புதிய தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று சி.பி.எஸ்.இ. செயலாளர் அனுராக் திரிபாதி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com