கொரோனாவால் பெற்றோரை இழந்த 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது: சி.பி.எஸ்.இ.

கொரோனாவால் பெற்றோரை இழந்த 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

கொரோனாவால் பெற்றோரை இழந்த, அடுத்த ஆண்டு (2021-22) 10, 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு பதிவு கட்டணம், தேர்வு கட்டணம் கிடையாது என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

தத்து பெற்றோர், சட்டப்பூர்வ காப்பாளர் ஆகியோரை கொரோனா தொற்றால் இழந்த மாணவ, மாணவியருக்கும் இது பொருந்தும். அடுத்த ஆண்டு 10, 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் பட்டியலை பள்ளிகள் சமர்ப்பிக்கும்போது, பெற்றோரை இழந்த மாணவர்கள் குறித்த விவரங்களை சரிபார்த்து வழங்க வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யாம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com