அமேசான், ப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் அபராதம்

அரசிடம் முறையாக பதிவு செய்யாத களைக்கொல்லி மருந்தை தமது தளங்களில் விற்ற புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தலா ரூ. 10 லட்சம் அபராதம்
அமேசான், ப்ளிப்கார்ட்
Published on: 

புதுடெல்லி,

அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும் ஜியோ மார்ட்டுக்கு 5 லட்சம் ரூபாயும் அபராதம் விதித்தது மத்திய நுகார்வோர் ஆணையம்.

பிளிப்கார்ட், அமேசான் ஆகிய இ-காமர்ஸ் நிறுவனங்கள் இந்திய இ-காமர்ஸ் சந்தையில் முக்கிய நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில்,

'சைக்ளோசினோன் களைக்கொல்லி' என்ற பதிவு செய்யப்படாத வேளாண் ரசாயனப் பொருளைத் தங்களது தளங்களில் விற்பனை செய்ததற்கும் விளம்பரப்படுத்தியதற்கும், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், ஜியோமார்ட் நிறுவனத்திற்கு ரூ.5 லட்சமும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) அபராதம் விதித்துள்ளது.

செப்டம்பர் 22 தேதியிட்ட ஒரு தனி உத்தரவில், நுகர்வோர் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம், அந்தப் பொருளின் செயல்திறன் மிக்க மூலப்பொருளின் வேதியியல் பெயரையோ அல்லது அதன் கலவையையோ வெளியிடாமல் சந்தைப்படுத்தப்படுவதைக் கண்டறிந்ததால், அந்த மூன்று மின்வணிக நிறுவனங்களையும் அப்பொருளின் விற்பனையையும் விளம்பரத்தையும் உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தியது.

தற்போதுள்ள சட்டத்தை மீறும் அல்லது நுகர்வோர் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் தயாரிப்புகளின் பட்டியலைத் தடுப்பதற்காக, தளங்கள் ஒரு சுய தணிக்கையை நடத்த வேண்டும் என்றும், உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com