போலீஸ் நிலையங்களில் சிசிடிவி கேமரா; மாநில அரசுகளுடன் மத்திய அரசு விரைவில் ஆலோசனை

போலீஸ் நிலையங்களில் சிசிடிவி கேமரா தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு விரைவில் ஆலோசனை நடத்த உள்ளது.
போலீஸ் நிலையங்களில் சிசிடிவி கேமரா; மாநில அரசுகளுடன் மத்திய அரசு விரைவில் ஆலோசனை
Published on

புதுடெல்லி,

போலீஸ் நிலையங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாதது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரித்தது. போலீஸ் நிலையங்களில் மனித உரிமை மீறல்களை தடுக்க சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்கவும், கேமரா பொருத்தப்படாத போலீஸ் நிலையங்களில் அதனை நிறுவ வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.

அதேபோன்று சி.பி.ஐ., அமலாக்கத்துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) உள்ளிட்ட புலனாய்வு நிறுவனங்களின் அலுவலகங்களிலும் கேமராக்களை நிறுவ மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும், நுழைவு வாயில் மற்றும் வெளியே றும் இடங்கள், பிரதான வாயில், லாக்-அப் அறைகள்,

தாழ்வாரங்கள், லாபி, வரவேற்பு அறை மற்றும் லாக்-அப் அறைகளுக்கு வெளியே உள்ள பகுதிகளிலும் கேமராக்கள் பொருத்தப்படுவதை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும், இரவிலும் ஆடியோ மற்றும் வீடியோ காட்சிகள் பதிவாகும் வகையிலும், ஓராண்டுகள் வரை பதிவுகளை சேமித்து வைக்கும் வகையிலும் கேமராக்கள் நிறுவப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம்நாத் மற்றும் சந் தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வக்கீல் சித் தார்த் தேவ், 'சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி மத்திய அரசு, மாநில அரசு களுடன் ஒரு கூட்டத்தை நடத்தியது. இதில் சில மாநிலங்கள் பங்கேற்கவில்லை. அடுத்த கூட்டம் மார்ச் 14-ந்தேதி நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு பின்பு அறிக்கை தாக்கல் செய்யப்படும்' என்றார். இதை ஏற்றுக்கொண்டு வழக்கு விசாரணை மார்ச் 23-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com