நடிகர் பங்கஜ் திரிபாதியின் மைத்துனரை பலி வாங்கிய விபத்து... சி.சி.டி.வி. வீடியோ

சாலையை கடப்பதற்காக நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணின் மீது உரசியபடி பாய்ந்து சென்ற கார், சென்டர் மீடியனில் மோதி நின்றது.
நடிகர் பங்கஜ் திரிபாதியின் மைத்துனரை பலி வாங்கிய விபத்து... சி.சி.டி.வி. வீடியோ
Published on

தன்பாத்:

பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதியின் தங்கை சபிதா திவாரி, அவரது கணவர் ராஜேஷ் திவாரி ஆகியோர் நேற்று பீகாரின் கோபால்கஞ்ச் பகுதியில் இருந்து கொல்கத்தாவுக்கு காரில் வந்துகொண்டிருந்தனர். டெல்லி-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தன்பாத் என்ற இடத்தில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரை ஓட்டி வந்த ராஜேஷ் திவாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தலையில் பலத்த காயமடைந்த சபிதா திவாரி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பான சி.சி.டி.வி. வீடியோ வெளியாகி உள்ளது. அதில், சாலையை கடப்பதற்காக நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணின் மீது உரசியபடி பாய்ந்து சென்ற கார், சென்டர் மீடியனில் மோதி நிற்பது பதிவாகி உள்ளது. அந்த பெண்ணின் கையில் இருந்த பை தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தது.

அந்த இடம் வாகனங்கள் சாலையை கடந்து செல்லக்கூடிய பகுதி என்பதால் வாகனங்கள் மெதுவாக வந்தன. ஆனால் ராஜேஷ் திவாரியின் கார் அதிவேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com