வலி நிவாரண மருந்துகளால் சிறுநீரகம் பாதிக்கப்படும்; மத்திய அரசு எச்சரிக்கை

டாக்டரின் பரிந்துரை இல்லாமல் ஸ்டீராய்டு அல்லாத வீக்கமுறிவு மருந்துகளை பொதுமக்கள் தொடர்ந்து உட்கொள்வது அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு எச்சரிக்கை
வலி நிவாரண மருந்து
Published on: 

புது டெல்லி,

வலி நிவாரணி மருந்துகளைத் தொடர்ந்து மற்றும் தன்னிச்சையாகப் பயன்படுத்துவது சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ள மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டுஅமைப்பு,மருத் துவர்கள்குறைந்தபட்சஅள விலான மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் எனப் புதிய வழி காட்டுதல்களைவெளியிட்டுள்ளது.

சாதாரண உடல்வலிகள் மற்றும் காய்ச்சலுக்காக மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ஸ்டீராய்டு அல்லாத வீக்கமுறிவு மருந்துகளை பொதுமக்கள் தொடர்ந்து உட்கொள்வது அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய முறையற்ற மற்றும் நீண்டகாலப் பயன் பாடு சிறுநீரகங்களின் செயல்பாட்டைப் பாதிப்ப தோடு, நாள்பட்ட சிறுநீரக நோய் உருவாவதற்கும் சிறுநீரகம் பாதிக்கப்படவும் வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதைக் கருத்திற் கொண்டு வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில், ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சுயமாக உட்கொள்வது மற்றும் தேவையற்ற முறையில் பயன்படுத்துவது ஆன்டி மைக்ரோபியல் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஷெட்யூல் ஹெச் மற்றும் ஹெச் 1 பிரிவுகளின் கீழ் வரும் இந்த மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி விற்கும் மருந்தகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில மருந்து கட் டுப்பாட்டுத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com