பிரபலங்களை வைத்து விளம்பரம் செய்வதால் ஜி எஸ் டி வெற்றி பெறாது - காங்கிரஸ்

பிரபலங்களை வைத்து விளம்பரம் செய்வதால் ஜி எஸ் டி வெற்றி பெறாது என்று காங்கிரஸ் சாடியுள்ளது.
பிரபலங்களை வைத்து விளம்பரம் செய்வதால் ஜி எஸ் டி வெற்றி பெறாது - காங்கிரஸ்
Published on

புதுடெல்லி

காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் மணீஷ் திவாரி அவர்களது கட்சி முதன்முதலாக ஜி எஸ் டியை பரிந்துரைத்தப்போது எதிர்த்துவிட்டு இப்போது அத்திட்டம் தங்களுடையது போல் கொண்டாடுகின்றனர் என்றார். பிரபலங்களை வைத்து விளம்பரம் செய்வதால் அது வெற்றி பெறாது என்று கூறிய அவர் அமிதாப் பச்சன் அதன் விளம்பர தூதராக இருக்கலாமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

காங்கிரஸ் கட்சியின் மராட்டிய பிரமுகர் சஞ்சய் நிருபம் அமிதாப் விளம்பர தூதராக இருந்து புதிய வரிமுறை வியாபாரிகளின் எதிர்ப்பைப் பெறும் போது அவர்களின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்றும், அவரது ரசிகராக தான் அவரை விளம்பர தூதராக இருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாக கூறினார்.

திவாரி மேலும் கூறும்போது, ஜூலை முதல் நாளிற்கு பிறகு என்ன நடக்கிறது என்பதைக் காண காத்திருப்போம். ஜி எஸ் டியின் தாக்கம் மக்களின் மீது எப்படியிருக்கிறது என்பதே பரிசோதனையாகும் என்றார்.

இன்று புதிய வரியமைப்பிற்கு சொந்தம் கொண்டாடுவோர் மன்மோகன் சிங் 2011 ஆம் ஆண்டில் அளித்த பேட்டியை காண வேண்டும். அதில் அவர் தங்களின் தலைவர்கள் மீதான குற்ற வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தி இத்திட்டத்தை அதற்கான பணயமாக கருதி செயல்பட்டனர் என்று சொன்னதை சுட்டிக்காட்டினார் திவாரி.

இன்று பாஜக இத்திட்டத்தை பலவீனப்படுத்தி செயல்படுத்துகிறது என்றும், இதை ஏற்பதற்கில்லை எனவும் சஞ்சய் நிருபம் கூறினார். அதனால்தான் அமிதாபை விளம்பர தூதராக செயல்பட வேண்டாம் என்று தான் கோருவதாகவும் என்று அவர் விளக்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com