

பாலக்காடு
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியை சேர்ந்தவர் அனீஷ் (வயது 22). எர்ணாகுளத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இவர், காதலர் தினத்தன்று தனது தோழியுடன் கொல்லம் மாவட்டம் அழீக்கல் கடற்கரைக்கு சென்றார்.
அப்போது அங்கு வந்த சிலர், காதலர் தின கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அனீஷ் மற்றும் அவரது தோழியை பலமாக தாக்கினர். மேலும் இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டனர். இந்த சம்பவம் குறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
எனினும் காதலர் தன சம்பவத்தால் அனீஷ் மிகுந்த மன உளைச்சலில் காணப்பட்டார். இதனால் அவர் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் தனது சாவுக்கு காரணமான இருவரின் பெயரையும் குறிப்பிட்டு இருந்தார். அவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.