2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு:விளக்கங்கள் பெற தொடர்பு எண், வாட்ஸ்அப் உரையாடல் குழு அறிமுகம்

பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு பதிலளிக்கவும், விளக்கங்களை அறிந்து கொள்ளவும் இந்தியப் பதிவாளர் ஜெனரல், சில வசதிகளை செய்துள்ளார்.
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு:விளக்கங்கள் பெற தொடர்பு எண், வாட்ஸ்அப் உரையாடல் குழு அறிமுகம்
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் தற்போது 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல்கட்ட பணி நடந்து வருகிறது. இதில் வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டு கணக்கெடுப்பு தொடர்பான கேள்விகள் கேட் கப்படுகிறது.

இதுதொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு பதிலளிக்கவும், விளக்கங்களை அறிந்து கொள்ளவும் இந்தியப் பதிவாளர் ஜெனரல், சில வசதிகளை செய்துள்ளார். அதன்படி 1855 என்ற தேசிய கட்டணமில்லா உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களுக்கு நிவர்த்தி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் பொதுமக்களுக்காக ஒரு வாட்ஸ்அப் உரையாடல் வசதியையும் அறிமுகப்படுத்தினார். இது அனைத்து மாநிலங்களின் பிராந்திய மொழிகளில் அறிந்து கொள்ளும் வசதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com