மக்கள் தொகை கணக்கெடுப்பு எதிரொலி; 4 மாநிலங்களுக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு

டிசம்பர் அல்லது ஜனவரியில் சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு எதிரொலி; 4 மாநிலங்களுக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு
Published on

புதுடெல்லி

நடப்பு ஆண்டில் நாட்டில் 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதன்படி தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடந்து முடிந்தது.

இதில், கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்து உள்ளது. மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. ஆட்சியை பிடித்து வரலாற்று வெற்றி பெற்றது. அசாமில் ஆட்சியை தக்க வைத்து கொண்டது.

சட்டசபை தேர்தல்

புதுச்சேரியில் பா.ஜ.க.வுடன் இணைந்து என்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்துள்ளது. தமிழகத்தில் முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சியமைத்து உள்ளது. இந்த சூழலில் கோவா, பஞ்சாப், உத்தர பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய 4 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தொடர்பாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால், இந்த 4 மாநிலங்களுக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என கூறப்படுகிறது. இதன்படி, டிசம்பர் அல்லது ஜனவரியில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதனால், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

இவற்றில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவால், கடந்த வாரம் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, பஞ்சாப் சட்டசபை தேர்தல் நடப்பு ஆண்டின் நவம்பரில் நடைபெற கூடும் என கூறினார். எனினும், பஞ்சாப்பில் நவம்பரில் தேர்தல் நடைபெறுவதற்கு பா.ஜ.க.வுக்கு விருப்பமில்லை என கூறப்படுகிறது. ஆனால், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com