ரேடியோ சேனல்கள் வன்முறையை ஊக்குவிக்கும் பாடல்களை ஒலிபரப்பக்கூடாது - மத்திய அரசு எச்சரிக்கை

ரேடியோ சேனல்கள் வன்முறையை ஊக்குவிக்கும் பாடல்களை ஒலிபரப்பக்கூடாது என மத்திய அரசு எச்சரித்து உள்ளது.
ரேடியோ சேனல்கள் வன்முறையை ஊக்குவிக்கும் பாடல்களை ஒலிபரப்பக்கூடாது - மத்திய அரசு எச்சரிக்கை
Published on

புதுடெல்லி,

மது, போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி கலாசாரம் ஆகியவற்றை ஊக்கப்படுத்தும் பாடல்களை ரேடியோ நிலையங்கள் ஒலிபரப்பக்கூடாது என மத்திய அரசு எச்சரித்து இருக்கிறது.

இது தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில் "ரேடியோ நிலையங்கள் கிராண்ட் ஆப் பர்மிசன் ஒப்பந்தம் மற்றும் புலம்பெயர் கிராண்ட் ஆப் பர்மிசன் ஒப்பந்தத்தில் கூறியுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் கண்டிப்பாக செயல்படவேண்டும்.

இந்த ஒப்பந்தங்களின் படி வன்முறை இடம்பெறும் எந்தவொரு விஷயத்தையும் ரேடியோவில் ஒலிபரப்பக்கூடாது. இதை மீறினால் அந்த ரேடியோ நிலையங்கள் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்று கூறப்பட்டு உள்ளது.

சில ரேடியோ சேனல்கள் மது, போதைப்பொருள், ஆயுதங்கள், கும்பல் மற்றும் துப்பாக்கி கலாச்சாரத்தை ஊக்கப்படுத்தும் பாடல்களை ஒளிபரப்பு செய்வதை தொலைத்தொடர்பு அமைச்சகம் கண்டறிந்ததை அடுத்து இந்த அறிவுரை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com