கொரோனா நிலவரம் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் மத்திய சுகாதார மந்திரி ஆலோசனை

கொரோனா நிலவரம் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் மத்திய சுகாதார மந்திரி ஆலோசனை நடத்தினார்.
கொரோனா நிலவரம் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் மத்திய சுகாதார மந்திரி ஆலோசனை
Published on

புதுடெல்லி,

இந்தியாவின் கொரோனா வைரஸ் பரவல் நிலவரம் குறித்து மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா, நாடு முழுவதிலும் இருந்து 120 மருத்துவ நிபுணர்களுடன் நேற்று காணொலி காட்சி வழியாக முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இதையொட்டி அவர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.

அதில் அவர், நாட்டில் தற்போதைய கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து நாடு முழுவதும் இருந்து 120 மருத்துவ நிபுணர்களுடன் காணொலி காட்சி வழியாக ஆலோசனை நடத்தினேன்.

அவர்களுடைய ஆலோசனைகளை கவனமாய் கேட்டேன். அதற்கேற்ற அறிவுரைகளை வழங்கினேன். கொரோனாவுக்கு எதிராக நாம் அனைவரும் ஒனறிணைந்து பணியாற்றிட முடியும் என்று நான் நம்புகிறேன் என கூறி உள்ளார்.

ஏற்கனவே கடந்த திங்கட்கிழமையன்று மன்சுக் மாண்டவியா, மராட்டியம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், குஜராத், கோவா, தத்ராநகர் ஹவேலி டாமன் டையு ஆகியவற்றின் சுகாதார மந்திரிகள், உயர் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியது நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com