

புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு, மத்திய மந்திரிசபையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், முதன்முறையாக மத்திய மந்திரிசபை விரிவாக்கம் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கியது.
இதன்படி டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் புதிய மந்திரிகளின் பதவியேற்பு விழா நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான விரிவாக்கம் செய்யப்பட்ட மந்திரிசபையில் 43 பேர் இடம்பெற்றனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 43 புதிய மத்திய மந்திரிகளுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
15 பேர் மத்திய மந்திரிகள்:-
நாராயண் தாட்டு ரானே, சர்பானந்த சோனோவால், விரேந்திர குமார், ஜோதிராதித்ய சிந்தியா, ராமசந்திர பிரசாத் சிங், அஸ்வினி வைஸ்னவ், பசுபதி குமார் பராஸ், கிரண் ரிஜிஜஜூ, ராஜ் குமார் சிங், ஹர்தீப் சிங் புரி, மன்சுக் மாண்டவியா, பூபேந்தர் யாதவ், புருசோத்தமன் ரூபலா, கிஷண் ரெட்டி, அனுராக் சிங் தாக்குர்
28 பேர் இணை மந்திரிகள்:-
பங்கஜ் சவுத்ரி, அனுபிரியா சிங் படேல், டாக்டர் சத்யபால் சிங் பாகேல், ராஜீவ் சந்திர சேகர், ஷோபா கரண்ட்லேஜே, பனு பிரதாப் சிங் வர்மா, தர்சனா விக்ரம ஜர்தோஷ், மீனாட்சி லெகி, அனுப்பிரியா தேவி, ஏ.நாராயணசாமி , கவுசல் கிஷோர், அஜய் பட் , பி.எல்.வர்மா, அஜய் குமார், சவுகான் தேவு சிங், பகவந்த் குபா, கபில் மோர்சவர் படேல், சுஷ்ரி பிரதிமா பவுமிக், சுபாஷ் சர்கார், பக்வத் கிஷண்ராவ் காரத், ராஜ்குமார் ரஞ்சன் சிங், பார்தி பிரவின் பவார், பிஸ்வேஸ்வர் துடு, சாந்தனு தாகூர், முஞ்சபரா மகேந்திரபாய், ஜான் பர்லா எல்.முருகன், நிஷித் பிரமனிக்
இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, ராஜ்நாத் சிங், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.