தொண்டு நிறுவனங்களுக்கு கிடைக்கும் வெளிநாட்டு நன்கொடைகளை கண்காணிக்க மத்திய அரசு நடவடிக்கை

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட என்.ஜி.ஓ.க்கள் என அழைக்கப்படும் தொண்டு நிறுவனங்கள், வெளிநாட்டு நன்கொடைகள் பெற அனுமதிக்கப்படுகின்றன.
தொண்டு நிறுவனங்களுக்கு கிடைக்கும் வெளிநாட்டு நன்கொடைகளை கண்காணிக்க மத்திய அரசு நடவடிக்கை
Published on

புதுடெல்லி,

தொண்டு நிறுவனங்கள் நிதி பெறுவதிலும், அவற்றை உள்நாட்டில் செலவழிப்பதிலும் ஏராளமான புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

இதை கருத்தில் கொண்டு, தொண்டு நிறுவனங்கள் பெறும் வெளிநாட்டு நன்கொடைகளை கண்காணிக்க மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான இணையதள வசதி நேற்று தொடங்கப்பட்டது.

அதில், வெளிநாட்டு நன்கொடை பெறப்பட்ட விவரங்களும், அப்பணம் இந்தியாவில் செலவழிக்கப்படும் விவரங்களும் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com